தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மீது நடிகை மஞ்சு வாரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லாலுவுடன் இணைந்து ‘ஓடியன்’ என்ற படத்தில் நடித்தார் மஞ்சு வாரியர். அப்போது அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் அவதூறு பரப்பி வருவதாகவும் காவல்துறையில் மஞ்சு வாரியர் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்ரீகுமார் கைதாகி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் மஞ்சு வாரியர் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாத நிலையில், ஆதாரங்களுடன் அவர் தமது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என்று கூறி, நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.