மஞ்சுவின் 47 வயது இளமை ரகசியம்

1 mins read
9370f298-b8c2-44e4-b4d5-f25dbd0b4418
மஞ்சு வாரியர். - படம்: ஊடகம்

மலையாளத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என பெரிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தி வருகிறார்.

தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் மஞ்சு வாரியர்.

நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்த அவரை ரசிகர்கள் சிலர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கின்றனர்.

47 வயதாகும் மஞ்சு வாரியர் இளம் நாயகிகளுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இளமைத் தோற்றத்தில் வலம் வருகிறார். இந்த வயதிலும் எப்படி இவ்வளவு நளினமாக அவர் இருக்கிறார் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

அந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில், அண்மையில் மஞ்சு வாரியர் தமது இளமை ரகசியம் குறித்து கூறியுள்ளார்.

“இப்போதும் அதே ஸ்டைல் மற்றும் இளமையுடன் நீங்கள் வலம் வருகிறீர்களே, அதன் ரகசியம் என்ன,” எனக் கேட்டபோது, அதற்கு, “உடற்பயிற்சி மற்றும் நடனம்தான் காரணம். சரியான உணவுமுறைகளும் என்னைப் பாதுகாப்பதாக உணர்கிறேன்,” என்று சிரித்தபடி கூறியுள்ளார் அந்த நடிகை.

மஞ்சு வாரியர் தினமும் தவறாமல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றுவருவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்