‘மங்காத்தா’ பட வசூல் ரூ.20 கோடி

‘மங்காத்தா’ பட வசூல் ரூ.20 கோடி

1 mins read
da5220d5-5ee7-4a24-9e1d-8f991e554afc
‘மங்காத்தா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினி ரிப்போர்ட்டர்ஸ்

அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடு கண்டுள்ளது.

கடந்த ஜனவரி 23ம் தேதி வெளியான இப்படத்தின் மொத்த வசூல் இதுவரை ரூ.20 கோடியைக் கடந்துவிட்டதாகத் தகவல்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், அவர் நடித்த ‘பில்லா’ படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில், திரிஷா கதாநாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்