‘மங்காத்தா’ படத்தின் மறுவெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புதுப்படத்தைப் போல் தமிழ் ஊடகங்கள் மறுவெளியீட்டுக்கும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறுவெளியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியான ’திரௌபதி-2’, ‘மாய பிம்பம்’, ‘ஜாக்கி’, ‘வங்காள விரிகுடா’ ஆகிய புதுப் படங்களைவிட, ‘மங்காத்தா’வின் வசூல் சிறப்பாக இருக்கிறதாம்.
அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடுத்த சில நாள்களுக்கும் திரையரங்க நுழைவுச் சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர். ‘மங்காத்தா’ திரையிடப்படும் பல திரையரங்குகளில் பல காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பக் கோருகிறார்களாம் ரசிகர்கள்.
அஜித் மனைவி ஷாலினி படம் வெளியான வெள்ளிக்கிழமையன்றே அதை திரையரங்கில் பார்த்து ரசித்ததாகத் தகவல் வெளியானது.
ஆனால், அவர் ‘மங்காத்தா’ படத்தைப் பார்க்க வரவில்லையாம். தன் சகோதரர் ரிச்சர்ட் நடித்துள்ள ‘திரௌபதி-2’ படத்தை பார்க்கவே திரையரங்குக்கு வந்துள்ளார்.

