ஆதி நடித்திருக்கும் ‘சப்தம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ‘மரகத நாணயம் 2’ விரைவில் துவங்க இருக்கிறோம் என்று ஆதி கூறினார்.
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017ல் வெளியான படம் ‘மரகத நாணயம்’.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் 2வது பாகம் தயாராக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதன்பின் எந்தவித செய்தியும் வெளிவரவில்லை.
இதற்கிடையே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள ‘சப்தம்’ என்ற படம் பிப்ரவரி 28ல் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆதியிடம் ‘மரகத நாணயம் 2’ குறித்து கேட்கப்பட்டதற்கு, “மரகத நாணயம் 2’ விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
“முதல் பாகத்தில் பணியாற்றியவர்களும் சேர்ந்து பெரிய குழு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்,’’ என பதிலளித்தார் ஆதி.