தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மார்ச்சில் வெளியாகிறது ‘வீர தீர சூரன்’

1 mins read
41b07bb8-b11e-4466-ad2a-5e29ef6e892a
‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம். - படம்: ஊடகம்

சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக தயாராகும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது.

இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சண்டை கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.

ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘விடாமுயற்சி’ பட வெளியீட்டில் நிகழ்ந்த குழப்பத்தால் இந்தப் பட வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.

தற்போது ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்