தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 4ல் திருமணம்: நாக சைதன்யா - சோபிதா அழைப்புகள் ஆரம்பம்

1 mins read
e5ebcffc-4d9c-490f-bb8e-553c1b48108b
நாக சைதன்யா-சோபிதா திருமண அழைப்பிதழ். - படம்: ஊடகம்

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, ‘பொன்னியின் செல்வன்’ நடிகை சோபிதா ஆகியோரது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இரவு 8 மணி 13 நிமிடங்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருமண அழைப்பிதழை இரு குடும்பத்தாரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரியும் ‘பாகுபலி’ நடிகர் ராணா டகுபதியின் அத்தையுமான லட்சுமி, நாகார்ஜுனாவின் பிரிவுக்குப் பின் சரத் விஜயராகவன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்

நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமி. பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான டி ராமாநாயுடுவின் மகளான லட்சுமியுடன் ஆறாண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

தன்னுடன் சில படங்களில் நடித்த நடிகை அமலாவை நாகார்ஜுனா காதலித்ததே அந்தப் பிரிவுக்குக் காரணம். நாகார்ஜுனாவும் அமலாவும் பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.

நாகார்ஜுனாவுக்கும் லட்சுமிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா.

நாக சைதன்யா, சோபிதா திருமண அழைப்பிதழில் நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி, அவரது கணவர் சரத், அப்பா நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா ஆகியோர் அழைப்பதாக அச்சிடப்பட்டுள்ளது.

நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

தற்போது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

குறிப்புச் சொற்கள்