தற்போது இளையர்கள் எவ்வளவு வேகமாக காதல்வயப்படுகிறார்களோ, அதே வேகத்தில் பிரிந்துவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
கைப்பேசி அறிமுகமான பிறகு உலகில் எல்லாமே மாறிவிட்டது என்றும் மனித உணர்வுகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் ஒரு காணொளிப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று எல்லாமே வேகவேகமாக நடக்கிறது. அதேசமயம் ஆழமான உறவுகளும் இருக்கவே செய்கின்றன.
“என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது கட்டாயமில்லை. மனத்தளவில் தயாரானால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்,” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறி வரும் நிலையில், சிம்புவோ திருமணம் என்பது கட்டாயமல்ல என்கிறார்.

