திருமண ஒளிபரப்பு: நயனை விஞ்சிய சோபிதா துலிபாலா

1 mins read
adecffa0-8124-4f4a-9035-0a329785cd36
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா. - படம்: ஊடகம்

நடிகர், நடிகையரின் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளைப் படம்பிடித்து ஒளிபரப்புவதில் ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் அண்மையில் ‘நெட்ஃபிலிக்ஸ்’ தளத்தில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு முன்னணி நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா திருமணத்தையும் அதே நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது.

வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் விமரிசையாக நடைபெற உள்ள திருமணத்தில் பல்வேறு திரையுலகங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணத்தை ஒளிபரப்ப நயன்தாராவுக்கு ரூ.25 கோடி அளித்த ஓடிடி நிறுவனம், நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி கொடுத்திருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்