13 மொழிகளில் வெளியாகும் ‘மார்ட்டின்’ படம்; துருவாவை தன் மகனாகப் பார்ப்பதாக அர்ஜுன் உருக்கம்

13 மொழிகளில் வெளியாகும் ‘மார்ட்டின்’ படம்; துருவாவை தன் மகனாகப் பார்ப்பதாக அர்ஜுன் உருக்கம்

1 mins read
92dc7638-516e-400a-bd36-47a9b72792c7
அர்ஜுன். - படம்: ஊடகம்

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘மார்ட்டின்’ படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய நடிகர் அர்ஜுன், “என் சகோதரியின் மகன் துருவா சர்ஜாவை தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இப்படத்தில் இரு விதமாக நான் பங்களித்துள்ளேன். துருவாவின் மாமாவாக நடித்திருந்தாலும் அவனை என் மகனாகத்தான் பார்க்கிறேன்.

“மற்றொரு பங்களிப்பாக படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளேன். துருவாவின் 5வது படம்தான் ‘மார்ட்டின்’. அவன் நடித்துள்ள ஒவ்வொரு படமும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. அவனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.

“அவனுக்காக என்னைப்போலவே ஒரு கதையை யோசித்து இக்கதையை எழுதியுள்ளேன். அதிரடி சண்டை, உணர்வு, காதல், வித்தியாசமான திரைக்கதை, நிறைய நடிகர், நடிகைகள் என எல்லாமே இப்படத்தில் இடம்பெற்றிருக்கும்,” என்று கூறியுள்ளார் அர்ஜுன். வசனம் எழுதி, ‘மார்ட்டின்’ படத்தை இயக்கியுள்ளார் ஏ.பி.அர்ஜூன்.

குறிப்புச் சொற்கள்