அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து, கடந்த மே ஒன்றாம் தேதி திரையிடப்பட்ட படம் ‘டூரிஸ்ட் பேமிலி’.
மே 24ஆம் தேதி ஜப்பான் மொழியில் இப்படத்தை வெளியிட இருப்பதாக இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்ட மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சுவரொட்டி வெளியிட்டு அறிவித்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஜப்பான் மொழியில் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படமும் ஜப்பான் மொழியில் வெளியானது.
நேர்மறையான விமர்சனங்களுடன் 16 நாள்களில் 63 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து, தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை ஜப்பானிலும் திரையிட உள்ளனர்.