தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரைப் பெண் மீனாட்சி

2 mins read
36e76907-0a94-41e3-8ea3-a60333da5a45
மீனாட்சி. - படம்: ஊடகம்

‘டிமாண்டி காலனி-3’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மீனாட்சி.

‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த இவரின், சொந்த ஊர் மதுரை. இதனால் தமிழ் படங்களில் கதாபாத்திரத்தை நன்கு புரிந்துகொண்டு தாய்மொழியில் பேசி நடிப்பது எளிதாக இருக்கிறது என்கிறார்.

எந்த மொழி பேசினாலும் ஒரு நடிகைக்கு சினிமா மொழி தெரிந்திருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் ரசிகர்கள் நம்மைக் கொண்டாடுவார்கள்.

“சினிமா மொழி தெரிந்திருந்தால்தான் இந்தத் துறையில் தாக்குபிடிக்க முடியும். அதேசமயம் தமிழ் பெண்ணாக இருப்பதால் சினிமாவில் எதையும் இழந்துவிடவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒருவகையில் லாபம்தான் அடைந்துள்ளனே்.

“பேய், திகில் படங்களில் மட்டும் ஏன் கவனம் செலுத்துகிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள். நல்ல கதைகள் என்று மனத்தில் தோன்றும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நேர்மறை சக்தி ஒன்று என்றிருந்தால், அதற்கு எதிர் சக்தி இருக்கும் என நம்புகிறேன். இந்த நம்பிக்கைதான் ‘டிமாண்டி காலனி-3’ல் நடிக்கும் முடிவை எடுக்க வைத்தது.

தற்போது ‘டிமாண்டி காலனி-3’ படப்பிடிப்பு ஜாலியாக நடக்கிறது. படப்பிடிப்பு போலவே தெரியவில்லை. “நெருக்கமான நண்பர்களுடன் ஏதோ சுற்றுலாவுக்குச் சென்ற மாதிரி உணர்கிறேன்,” என்று சொல்லும் மதுரைப் பெண் மீனாட்சி, தற்போது ‘வட்டக்கானல்’ என்ற படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் துருவன் மனோவுடன் நடித்து முடித்துள்ளாராம். மனோவும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“மனோ இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவரைப் போல் நேர்மறை சிந்தனை உடையவரைப் பார்த்ததில்லை. மகனுடன் நண்பரைப் போல் பழகுகிறார்.

“எங்கள் வீட்டிலும் அப்படித்தான். சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்றதும் அம்மா முழு மனதுடன் ஆதரித்து, ஊக்கம் கொடுத்தார். என் பாட்டியும் எனக்கு ஒரு தோழி போலத்தான். சிறு வயதில் நான் அவரது செல்லம். முன்பெல்லாம் படப்பிடிப்புக்கு அவரும் என்னுடன் வந்துவிடுவார். இப்போது நான் தனியாக வருகிறேன்.

“எந்தத் துறையாக இருந்தாலும் பெண்களுக்குச் சுதந்திரம் தேவை. ஆனால், அதைக் குடும்பம்தான் முதலில் கொடுக்க வேண்டும்,” என்று சொல்லும் மீனாட்சியை ‘கென்னடி கிளப்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சுசீந்திரன்.

“அதுவும் நடிப்புத் தேர்வு வைக்காமலேயே தேர்வு செய்தாராம். கபடி சிரமமான விளையாட்டாக இருக்கும் என்று மீனாட்சி பயந்தபோது, ‘எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ என்று தைரியமூட்டியதும் சுசீந்திரன்தான். ‘கபடி வீராங்கனையாக நடித்தால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அந்தப் பாத்திரம் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும்’ என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியபோது தொடக்கத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவருக்கு என் மீது முழு நம்பிக்கை இருந்தது. பல மேடைகளில் ‘மீனாட்சி என் மகள்போல’ என்று கூறியுள்ளார்.

“விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் நடித்தபோது அவரது அர்ப்பணிப்பை நேரில் பார்த்து வியந்துபோனேன். நடிப்பைப் பிரம்மாண்டமாகவும் நட்பை எளிமையாகவும் வைத்திருப்பவர். ‘லைட் பாய்’ முதல் சக நடிகர் வரை சமமாக நடத்தக்கூடியவர்,” என்கிறார் மீனாட்சி.

குறிப்புச் சொற்கள்