திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
தற்போது மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிருதயபூர்வம்’ மலையாளப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளாராம்.
இதில், மாளவிகா மோகனன் நாயகியாகவும் ‘பூவே உனக்காக’ சங்கீதா முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
முன்னதாக, ‘ரசதந்திரம்’, ‘இன்னத்தே சிந்தா விஷயம்’ ஆகிய மலையாளப் படங்களில் நடித்திருந்தார் மீரா ஜாஸ்மின்.
‘ஹிருதயபூர்வம்’ படச் சுவரொட்டியில் மீராவும் நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப்பும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழிலும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகக் கூறியுள்ளார் மீரா.