மலேசியாவில் அஜித்துடன் சந்திப்பு: காரணத்தை விளக்கிய ஸ்ரீலீலா

1 mins read
657c749a-f1b2-45f0-b8d0-d0e331241677
ஸ்ரீலீலா. - படம்: சியாசாட்.காம்

அண்மையில் மலேசியா சென்றிருந்த நடிகை ஸ்ரீலீலா, அங்கு நடிகர் அஜித்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜனவரி 10ஆம் தேதி திரைகாண உள்ள ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காகப் படக்குழுவினர் மலேசியா சென்ற போதுதான் அஜித்-ஸ்ரீலீலா சந்திப்பு நடந்ததாம்.

அண்மையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீலீலாவிடம் மலேசியாவில் அஜித்துடனான சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, தாம் அஜித்தின் தீவிரமான ரசிகை என்றார் ஸ்ரீலீலா.

“கார் பந்தயங்களை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய பெண் நான். அண்மையில் நான் மலேசியா சென்றபோது அஜித் அங்கு நடந்த போட்டியில் பங்கேற்றிருந்தார். அதனால்தான் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்,” என்று ஸ்ரீலீலா பதில் அளித்தார்.

‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அஜித்தின் 64வது படத்தில் ஸ்ரீலீலாதான் நாயகியாக நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்