தொடங்கியது ‘மெய்யழகன்’ மோகம்

தொடங்கியது ‘மெய்யழகன்’ மோகம்

1 mins read
ecd015a6-1a33-4804-b759-e4d13e306f0b
‘மெய்யழகன்’ படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி. - காணொளிப் படம்: திங்க் மியூசிக் இந்தியா / யூடியூப்

விஜய் சேதுபதி, திரி‌ஷா நடிப்பில் வெளிவந்த ‘96’ திரைப்படத்தின் இயக்குநரான பிரேம் குமார் இயக்கியிருக்கும் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் ‘மெய்யழகன்’.

கார்த்தியின் 27வது படமான இதை சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘மெய்யழகன்’ வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27)வெளியாகவிருக்கிறது. ‘96’ படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாயின.

படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படமும் ‘96’ஐப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. படத்துக்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘96’ மோகம் இப்போது ‘மெய்யழகனையும்’ கவ்விவிட்டதுபோல் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா