தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மெய்யழகன்’ படம் ஒரு காவியம்: நானி புகழாரம்

2 mins read
fbd20942-a3af-4bf9-9c46-e00fe64e9a20
நடிகர் நானி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

மே 1ஆம் தேதி நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ படம் வெளியாகவுள்ளது. இதனைச் சென்னையில் விளம்பரப்படுத்தும்போது நானி, ‘மெய்யழகன்’ படத்தைப் பாராட்டிப் பேசினார்.

விளம்பர நிகழ்ச்சியில் ‘மெய்யழகன்’ குறித்து நானி, “தமிழ் சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகிலேயே சிறந்த படமென்றால் ‘மெய்யழகன்’தான். அப்படம் ஒரு சிறந்த காவியம். அது ஒரு மேஜிக்.

“பெரிய அரங்குகள் அமைத்து, 1,000 கோடி ரூபாய் வரை செலவு என என்ன செய்தாலுமே ‘மெய்யழகன்’ மாதிரி ஒரு படம் எடுக்க முடியாது. அந்தப் படம் ஒரு சிறந்த மேஜிக். ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயத்தை தொட்டு படமாக செய்திருப்பதாக நினைக்கிறேன்.

“கார்த்தி, அரவிந்த்சாமி, இயக்குநர் பிரேம் குமார் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

“‘மெய்யழகன்’ பார்த்துவிட்டு கார்த்தியிடம் நீண்ட நேரம் பேசினேன். அரவிந்த்சாமிக்கு என் வாழ்த்தைக் கூறுமாறு தெரிவித்தேன். ‘மெய்யழகன்’ படம் பற்றி எப்போது நினைத்தாலும், மகிழ்ச்சியாகி விடுவேன்,” என்று மேடையில் கூறினார் நானி.

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது.

நானி தற்பொழுது நடித்திருக்கும் ‘ஹிட் 3’ படத்தை தெலுங்கில் சைலேஷ் கோலனு இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா நிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

60 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தானு என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி இருக்கிறார். இந்தப் பாடலை தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பாடியுள்ளார். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்