லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடலை வெளியிட்டுள்ளனர். பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. அத்துடன், யூடியூப் டிரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மைக்காலமாக அனிருத் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் வெளியானதும் கூடவே அதுகுறித்த சர்ச்சைக் கருத்துகளும் எழுந்து வருகின்றன.
ஏற்கெனவே வெளியாகி, வெற்றிபெற்ற பாடல்களைக் காப்பியடித்து அவர் இசையமைப்பதாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்போது வெளியாகியுள்ள மோனிகா பாடலானது ஏற்கனவே அனிருத் இசையமைத்த ‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெற்ற ‘சாவடீக்கா’ என்ற பாடலின் காப்பி என்று வலைத்தளவாசிகள் விமர்சித்து உள்ளனர்.
அதோடு இதுவரை மற்றவர்களின் பாடலைக் காப்பியடித்த அனிருத், இப்போது தன்னுடைய பாடலையே காப்பி அடிக்கத் தொடங்கிவிட்டாரா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் கடந்த மாதம் வெளியானது. டி. ராஜேந்தர், அனிருத், அறிவு ஆகியோர் நடனமாடியிருந்த அப்பாடல் அவ்வளவாக ரசிகர்களைக் கவரவில்லை.