அழகுப் பராமரிப்புக்கு நடிகைகள் அருந்தும் ‘அற்புத’ பானங்கள்

அழகுப் பராமரிப்புக்கு நடிகைகள் அருந்தும் ‘அற்புத’ பானங்கள்

2 mins read
daa03300-9628-41ff-a0d6-54b8af16a143
(இடமிருந்து) தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப். - படங்கள்: மாலைமலர்

திரை உலகில் எப்போதும் இளமையாகவும் பொலிவாகவும் மிளிரும் நடிகைகளின் அழகிற்குப் பின்னால் அவர்களின் கடுமையான உணவுக் கட்டுப்பாடும் சீரான காலை நேர பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள் தங்கள் நாளை தொடங்குவதற்கு முன் அருந்தும் ‘அற்புத’ பானங்கள் குறித்து ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் (கிரீன் ஜூஸ்)

தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், தனது பொலிவான சருமத்தைப் பராமரிக்க அதிகாலையில் ‘கிரீன் ஜூஸ்’ அருந்துகிறார். வெந்நீரில் வேகவைத்த கீரை, செலரி, எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து இந்த ஆரோக்கிய பானத்தைத் தயார் செய்து அவர் அருந்துகிறார்.

தீபிகா படுகோன் (இயற்கைச் சாறு)

கூந்தல் அடர்த்தியாகவும், சருமம் பளபளப்பாகவும் இருக்க தீபிகா ஒரு சிறப்பு கலவையைத் தேர்ந்தெடுக்கிறார். புதினா, மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, பீட்ரூட் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து சாறெடுத்து வெறும் வயிற்றில் குடிக்கிறார்.

கத்ரீனா கைஃப், ஆலியா பட் (எலுமிச்சை நீர்)

கத்ரீனா கைஃப் காலையில் எழுந்ததும் வெறும் வெந்நீர் அல்லது அதில் எலுமிச்சை/இஞ்சிச் சாறு கலந்து குடித்தபிறகே உடற்பயிற்சியைத் தொடங்குகிறார்.

ஆலியா பட் அதிகாலையில் எலுமிச்சை கலந்த வெந்நீரையே தனது முதல் பானமாக எடுத்துக்கொள்கிறார்.

ஷில்பா ஷெட்டி (மருத்துவக் கலவை)

யோகா, ஆரோக்கியத்திற்குப் பெயர் பெற்ற ஷில்பா ஷெட்டி, பாரம்பரிய மருத்துவக் குணங்கள் கொண்ட பானத்தை அருந்துகிறார். வெந்நீரில் நெய், மஞ்சள் தூள், மிளகுப்பொடி கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மலாய்க்கா அரோரா (சீரக நீர்)

உடல் எடையைச் சீராக வைத்திருக்க மலாய்க்கா அரோரா ஒரு தனித்துவமான பானத்தைக் குடிக்கிறார். சீரகம், பெருஞ்சீரகம், செலரி ஆகியவற்றை வறுத்து, இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கிறார். காலையில் அதனை லேசாகச் சூடாக்கி, எலுமிச்சைச் சாற்றுடன் அருந்துகிறார்.

குறிப்புச் சொற்கள்