நடிகை மிருணாளினி பெங்களூரில் புதுவீடு கட்டி புதுமனைப் புகுவிழா நடத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தனது தாயாரின் பெயரில் வீடு கட்ட வேண்டும் என்பதுதான் இவரது கனவாம்.
“என் தந்தை அவரது தாயாரின் பெயரில் ஒரு வீட்டைக் கட்டினார். அதே போல் நானும் என் அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்ட விரும்பினேன். அந்த நீண்ட நாள் கனவு இப்போது நனவாகியுள்ளது.
“ரசிகர்களின் அன்பாலும் ஆசியாலும்தான் இது சாத்தியமானது. இதற்காக என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி,” என்கிறார் மிருணாளினி.
தன் வீட்டுக்கு ‘மொழி இல்லம்’ என்று பெயர் வைத்துள்ளார்.
மிருணாளினிக்கு திரையுலகத்தினரும் ரசிகர்களும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
அவர் இரு புதுப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

