சொந்தப் படம் தயாரித்து நொடித்துப்போன நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.
இந்நிலையில், வீட்டு உரிமையாளருடன் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டைச் சூறையாடி ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தையும் அவருக்குக் கிடைத்த ‘கலைமாமணி’ விருதையும் யாரோ திருடிச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து கஞ்சா கருப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் தனது வீட்டு உரிமையாளரை சந்தேகப்படுவதாகக் கூறப்படுகிறது.
“கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். என் வீட்டைக் கஞ்சா கருப்பு உள்வாடகைக்கு விட்டுள்ளார். அங்கு சட்டவிரோதச் செயல்கள் நடக்கின்றன,” என்று வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.