‘தவறாகப் பயன்படுத்தப்படும்’ பெயர், படம்: நீதிமன்றத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

‘தவறாகப் பயன்படுத்தப்படும்’ பெயர், படம்: நீதிமன்றத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

09 Oct 2026 - 7:09 pm

1 mins read

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பெயர், படம் உள்ளிட்ட ஆளுமை அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுக்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை, கடிதம் ஆகியவற்றை அனுப்பியுள்ளது.

அனுமதியின்றிப் பயன்படுத்தப்படும் அடையாளங்கள்

விஜய் தேவரகொண்டாவின் பெயர், படம் உள்ளிட்ட ஆளுமை அடையாளங்களை அவரது அனுமதியின்றி வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தி டீ-சட்டை, குவளை உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்கள், போலியான விளம்பரங்கள் வாயிலாகவும் அவரது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போலி முகவர்கள் குறித்துப் புகார்

மேலும், விஜய் தேவரகொண்டாவின் நிர்வாகிகள் அல்லது முகவர்கள் எனக் கூறி சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவரது தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வந்தன. அதையடுத்து, மனுக்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பாணை, கடிதங்களை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கங்கனா ரணாவத்தைப் போலவே, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தனது பெயர், படம் உள்ளிட்ட ஆளுமை அடையாளங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அவற்றைப் பாதுகாக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமாதிரைப்படம்நீதிமன்றம்செயற்கை நுண்ணறிவுஏஐ