மலையாள நடிகர் மோகன்லால் அண்மையில் தனது 65வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார்.
அவர் கடைசியாக நடித்த இரண்டு படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், அவரது 47 ஆண்டு திரை வாழ்க்கை புத்தகமாக உருவாக்கப்படுகிறது. இந்தத் தகவலை தனது பிறந்தநாள் அன்று வெளியிட்டுள்ளார் மோகன்லால்.
“எனது திரைப்பயணத்தின் பல்வேறு கட்டங்களைக் குறிக்கும் புத்தகம் இது. பல ஆண்டுகளாக என்னுடன் இருந்து, என் வாழ்க்கையைக் கடிதங்களாகப் பதிவு செய்துவரும் எழுத்தாளர் பானுபிரகாஷ் முயற்சியால் இது சாத்தியமானது,” என மோகன்லால் கூறியுள்ளார்.
ஆயிரம் பக்கங்கள் கொண்ட மோகன்லால் புத்தகம், எதிர்வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அச்சமயம்தான் தனது திரை வாழ்க்கையின் 47 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார் மோகன்லால்.