சர்ச்சை கதையின் நாயகனாக மோகன் லால்

1 mins read
faa44a0a-b01d-4f18-957d-4e457cef25b9
ஞானவேலின் ‘தோசா கிங்’ படத்தில் நாயகனாக நடிக்க மோகன் லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. - படம்: ‘எக்ஸ்’ தளம்

‘ஜெய் பீம்’ எனும் சமூகக் கருத்து உடைய படத்தையெடுத்து ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் இயக்குநர் ஞானவேல்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி - ஞானவேல் கூட்டணியில் ‘வேட்டையன்’ கடந்தாண்டு வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் வாழ்க்கையை ஞானவேல் படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில், தற்போது அப்படத்தில் நாயகனாக மோகன் லால் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தோசா கிங்’ ஒரு பான் இந்திய படமாகத் தயாராக இருப்பதால் இந்தியா முழுவதும் அறியப்படும் புகழ்பெற்ற நடிகரை அப்படத்தின் நாயகனாக ஞானவேல் களமிறக்க முடிவெடுத்திருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்ன.

இது உறுதிப்படுத்தப்படாத தகவல்தான் என்றாலும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்