மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ வசூலில் முன்னணி

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ வசூலில் முன்னணி

1 mins read
68b0e959-76c9-4f40-8cfb-e903d98f3ddc
‘திரிஷ்யம் 3’ உருவானது பற்றிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. - படம்: நியூஸ்நவ்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்தப் படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்தப் படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது.

நேரடியாக ஓடிடியில் வெளியான ‘திரிஷ்யம் 2’ முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது ‘திரிஷ்யம்’ 3ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் மே 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறை இல்லாமல் இருக்கிறது. 58 மணி நேரத்தில் ரூ.100 கோடி வசூலித்த இப்படம் தற்போது ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரண்டாவது வாரத்திலும் கேரளத்தில் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மோகன்லால் நடிப்பில் மீண்டும் 200 கோடி ரூபாய் வசூல் தந்த படமாக ‘திரிஷ்யம் 3’ அமைந்துள்ளது.

மலையாளத்தில் அதிக வசூலைக் குவித்த படமாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகோ சாப்டர் 1’ உள்ளது. அதையும் இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ படம் உருவான காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திகேரளாதிரையுலகம்