தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான படம் ‘துடரும்’. மிகப்பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல் வெளி வந்திருக்கும் இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘திரிஷ்யம்’ போலவே மர்மம் கலந்த குடும்பப் படமாக வெளிவந்திருக்கும் ‘துடரும்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எல் 2 எம்புரான்’ படம் வசூலை குவித்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.