தனது பெயரில் பண மோசடி நடப்பதாக நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
தனது கைப்பேசி எண்கள் என்று குறிப்பிட்டு ஒரு கும்பல் பலரிடமும் பணம் கேட்டு தகவல் அனுப்புவதாகவும் ரசிகர்கள் இதை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“எனது கைப்பேசி எண்களை நான் அறிமுகமற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை. எனக்கு நன்கு தெரிந்த யாரும் இவ்வாறு பிறரை ஏமாற்ற வாய்ப்பும் இல்லை.
“எனவே என் பெயரைக் குறிப்பிட்டு யாராவது தொடர்புகொண்டால் ஏமாந்துவிட வேண்டாம். தொழில் நிமித்தமாக என்னைத் தொடர்புகொள்ள நினைத்தால் மின்னஞ்சல் அனுப்பலாம்,” என்று கூறியுள்ள சாக்ஷி அகர்வால், தற்போது ‘கெஸ்ட் -2’, ‘புரவி’, ‘120 ஹவர்ஸ், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.