தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மார்ச் 15 முதல் ‘மூக்குத்தி அம்மன்-2’ படப்பிடிப்பு

1 mins read
713c5b43-bcc2-45c3-97bb-6c1d53f5796a
நயன்தாரா. - படம்: ஊடகம்

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிய வந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்குவார் என படத்தின் தயாரிப்புத்தரப்பு அறிவித்தது. எனினும், பட வேலைகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.

தற்போது படத்தின் பூசை மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்