தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலாஜி முருகதாஸ் படத்திற்கு அதிக திரையரங்குகள்

1 mins read
6b6655c0-4520-4515-8c97-ba35ae47a90a
ஃபயர் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாலாஜி முருகதாஸ். - படம்: ஊடகம்

பாலாஜி முருகதாஸ் தான் நடித்திருக்கும் ‘ஃபயர்’ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 

‘ஃபயர்’ படத்தின் மூலம் தனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக படத்தின் நாயகன் பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே திரையிட்ட திரையரங்குகள் எல்லாம் தற்பொழுது 4 காட்சிகள் திரையிடுகின்றன. சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் வசூல் அள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், இதுவரை வந்த படங்களில் அதிக வசூலை ‘ஃபயர்’ படம் பெற்றிருக்கிறது.

“நல்ல கதையம்சத்துடன் படம் உருவாகி இருப்பதே இதற்கு காரணம். தொடக்கத்தில் 20 திரையரங்குகளில்தான் சென்னையில் ‘ஃபயர்’ படம் வெளியானது. ஆனால், தற்போது 60 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டு, ‘ஃபயர்’ படம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

“படத்தில் நடித்த அனைவருக்கும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் நன்றி,” என பதிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

நாகர்கோயில் காசி இளம் பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கதையை மையமா கொண்டு உருவான இந்தப் படத்தில் காசி கதாபாத்திரத்திலேயே பாலா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாபாலியல்