2023ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்கள்

2023ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்கள்

1 mins read
745d76ed-422b-41a9-8263-8b1fe503bea8
பட்டியலில் ஐந்து தமிழ்த் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. படம்: இணையம் -

இவ்வாண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 20 இந்தியத் திரைப்படங்களின் பட்டியலை 'ஐஎம்டிபி' எனும் இணையத் திரைப்படத் தரவுத்தளம் வெளியிட்டுள்ளது. இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஒளிரும் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம், அப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன், அவரது நடப்பில் உருவாகிவரும் ஜவான், டங்கி படங்களுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் பட்டியலில் 11 இந்தி மொழித் திரைப்படங்கள். ஐந்து தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் ஒரு கன்னடப் படமும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வாரிசு, துணிவு, இந்தியன்-2, வாடிவாசல், விஜய்யின் 67வது படம் ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் படங்கள். கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான 'கைதி' படத்தின் இந்தி மறுபதிப்பான 'போலா'விற்கும் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சல்மான்கானின் கிஸி கா கிஸி கி ஜான், டைகர் 3 படங்களையும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக ஐஎம்டிபி பட்டியலிட்டுள்ளது.