தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகம் பகிரப்படும் சிம்ரன் காணொளி

1 mins read
98978adc-b8c7-44ad-9a39-1279ede87c79
சிம்ரன். - படம்: ஊடகம்

இன்றைய தேதியில் சமூக ஊடகங்களில் எந்தப் பதிவு அதிகமாகப் பகிரப்படும் என்பதை கணிக்கவே முடியவில்லை என்கிறார் நடிகை சிம்ரன்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, சிம்ரன் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், சிவப்பு நிறச் சேலை கட்டி தாம் நடந்து வரும் காணொளி ஒன்றை, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சிம்ரன்.

ரசிகர்களுக்கு அது பிடித்துப்போக, ஆயிரக்கணக்கானோர் அந்தப் பதிவைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

“இணையத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் வேகமும் விதமும் பிரமிப்பூட்டுகிறது,” என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிம்ரன்.

குறிப்புச் சொற்கள்