முன்னேறுங்கள்: தமிழக வீரரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

1 mins read
8ede7a75-1715-463b-b439-c4a370229a05
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதைபற்றி நடிகர்கள் சிலரும் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தோனியை பற்றி நடிகர் விஷ்ணு விஷாலின் அண்மையப் பதிவும் பரலாகப் பலரால் பேசப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த போட்டியில் இத்தொடரில் மொத்தமாக 417 ரன்கள் குவித்து நிக்கோலஸ் பூரணைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சனின் இந்தக் கவனிக்கத்தக்க ஆட்டத்திற்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நீங்கள் விளையாடும் விதம் பிடித்திருக்கிறது. முன்னேறிச் செல்லுங்கள்.உங்களின் இந்த மாபெரும் திறமையை இந்திய அணியின் உடையில் காணக் காத்திருக்கிறேன்,”எனச் சாய் சுதர்சன் ஆரஞ்சு நிறத் தொப்பியைக் கைப்பற்றியதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

சாய் சுதர்சன் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்