ஜெயம் ரவி, கங்கனா ரணாவத் இணைந்து நடித்த ‘தாம் தூம்’ படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது.
ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாக உள்ளது.
ஜனவரி 3ஆம் தேதியன்று தமிழகத்தில் 50க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியீடு காணுமாம்.
அண்மைக் காலமாக தமிழகத்தில் மறுவெளியீடு காணும் திரைப்படங்கள் நல்ல வசூல் கண்டு வருகின்றன. அந்த வரிசையில் ‘தாம் தூம்’ படமும் இடம்பெறும் என்று ஜெயம் ரவி ரசிகர்கள் நம்புகிறார்கள்.