தள்ளிப்போகும் ‘ஹாய்’ பட வெளியீடு

தள்ளிப்போகும் ‘ஹாய்’ பட வெளியீடு

1 mins read
9a67abbb-2fd7-48f3-a779-9a6f05914ab5
‘ஹாய்’ படத்தில் ஒரு காட்.சி. - படம்: டீடி நெக்ஸ்ட்/முகநூல்
Google News Preferred Icon

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் இணைந்து நடிக்கும் படம் ‘ஹாய்’. இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியீடு காணும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சில காரணங்களால் திட்டமிட்டபடியே குறித்த நாளில் படம் வெளியாகாது எனக் கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதியில் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, விஷாலின் ‘மகுடம்’ ஆகிய இரு படங்கள் வெளியாகின்றன.

இந்தக் கடும் போட்டியில் களமிறங்கினால், தங்கள் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என ‘ஹாய்’ படக்குழுவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் அளவிலான நிதிச்சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. அதைச் சரிசெய்துவிட்டு, போட்டியின்றி வேறொரு நாளில் படத்தை வெளியிடத் தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்