இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது தெரிந்த தகவல்தான். அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்துக்கு ‘இளையராஜா’ என்றே தலைப்பும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் திடீரெனக் கைவிடப்பட்டதாக கோடம்பாக்க வட்டாரங்களில் ஒரு தகவல் பரவியது.
ஆனால் அது உண்மை இல்லை என இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.
தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படப்பிடிப்பை அடுத்தாண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு நடத்தலாம் என முடிவு எடுத்துள்ளனராம்.
அச்சமயம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.