சட்டப்பேரவை உறுப்பினராக ரவி மோகன்

சட்டப்பேரவை உறுப்பினராக ரவி மோகன்

படம்: ஊடகம்

09 Jul 2025 - 5:56 pm

1 mins read

‘கராத்தே பாபு’ படத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக நடித்துள்ளார் ரவி மோகன்.

முழுநீள அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால், சில முக்கியமான அரசியல் பிரமுகர்களின் பழக்க வழக்கங்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறாராம்.

அவர்கள் பொதுமக்களைச் சந்திக்கும்போது எப்படி பேசிப் பழகுகிறார்கள், அவர்களின் தனிப்பட்ட சில குணாதிசயங்களையும் கவனித்து வருகிறார்.

படம் பார்க்கும் ரசிகர்களால் அவர் யாரைப் போல் நடிக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் தமது கதாபாத்திரம் அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறாராம் ரவி மோகன்.

“முழுக்க முழுக்க புதிய அரசியல்வாதியை தமிழ் ரசிகர்கள் திரையில் காண உள்ளனர். அவர்களைப் போலவே எனக்கும் இது மாறுபட்ட அனுபவத்தைத் தரப்போகிறது.

“இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே, உடனடியாகத் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் ரவி மோகன்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்அரசியல்திரைப்படம்