கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவது தென்னிந்தியத் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்துள்ளது. ரூ.500 கோடி முதலீட்டில் தயாரான படம் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்தனர்.
இதேபோல் ’டாக்சிக்’ கன்னடப் படத்தையும் ரூ.500 கோடி செலவில் தயாரித்துள்ளது கேவிஎன் நிறுவனம். தற்போது ‘டாக்சிக்’ படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அப்படத்தின் நாயகன் யஷ்ஷின் பிறந்தநாளையொட்டி முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டனர்.
ஆனால், அந்தத் தொகுப்பில் ஆபாசமான, ஒழுக்கக்கேடான காட்சிகள் இருப்பதாகக்கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து சிலர் தணிக்கை வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இந்த இரு படங்களிலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

