ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் படங்கள் அதிகமாக வெளியாகும். 2025ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வாரம் டிசம்பர் 26ஆம் தேதி வருகிறது. ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதியன்றே சில புதிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் ‘ரெட்ட தல’; விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய்குமார், அனிஷ்மா, அனந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘சிறை’; சோனியா அகர்வால் நடிக்கும் ‘பருத்தி’ ஆகிய படங்கள் டிசம்பர் 25ஆம் தேதியும், ‘ரகசிய சினேகிதனே’ என்ற படம் டிசம்பர் 26ஆம் தேதியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் இந்த ஆண்டின் வெளியீடுகள் நிறைவுக்கு வருகின்றன.

