‘மிஸ்டர் எக்ஸ்’: ஆர்யாவின் திகிலூட்டும் திரைப்படத்திற்குப் பாராட்டு

‘மிஸ்டர் எக்ஸ்’: ஆர்யாவின் திகிலூட்டும் திரைப்படத்திற்குப் பாராட்டு

படம்: ஆர்யா/ ‘மிஸ்டர் எக்ஸ்’ படக்குழு

24 Apr 2026 - 7:55 pm

1 mins read

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இது ஒரு முழுமையான ‘ஸ்பை த்ரில்லர்’ திரைப்படமாகும். அனைத்துலக அளவில் நடக்கும் சதித் திட்டங்களை முறியடிக்கும் ஒரு ரகசிய உளவாளியாக ஆர்யா நடித்துள்ளார்.

படம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆர்யா, கௌதம் கார்த்திக் இடையேயான மோதல் காட்சிகள் ரசிகர்களிடையே பெருவரவேற்பைப் பெற்றுள்ளன.

மஞ்சு வாரியர் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து நடிப்புத் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

அருள் வின்சென்டின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு படத்திற்குத் தனி அழகைக் கொடுத்துள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், விறுவிறுப்பான திரைக்கதையால் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறது.

தமிழ்த் திரையுலகில் ஒரு தரமான திகிலூட்டும் படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ ஒரு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது. படக்குழுவினரை ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
இயக்குநர்மோதல்நடிகர்திரைப்படம்