பிரபல இந்தி நடிகை மிருணாள் தாக்கூர் அடுத்து சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
அண்மையில் வெளியான ‘ரெட்ரோ’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, தனது 45வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ஏற்கெனவே திரிஷா ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு அடுத்தபடியாக ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று பெயரிட்டுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியான நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.


