தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரைத் தமிழில் பேசி நடிக்க விரும்பும் மிருணாளினி

1 mins read
b82f829c-0740-41be-8a31-b693157ad0b6
மிருணாளினி ரவி. - படம்: ஊடகம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்றுள்ளார் நடிகை மிருணாளினி ரவி.

பொங்கல் என்பதால் மொத்த ஊரும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பொங்கல் பண்டிகைக் காலத்தில் நான் மதுரைக்கு வந்ததில்லை. இப்போது ஊரைப் பார்த்ததும் மதுரை பெண் போல் பேச ஆசையாக உள்ளது.

“எனக்கு மதுரை வட்டார வழக்கில் பேசத் தெரியாது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கற்றுக்கொண்டு நடிப்பேன். ‘மதுரை பெண் போன்று அசத்தலாகப் பேசி நடித்துள்ளார்’ என்று ரசிகர்கள் பாராட்டினால் அதுவே எனக்குப் போதும்,” என்கிறார் மிருணாளினி.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், அதற்குப் பிறகு ’எம்ஜிஆர் மகன்’, ‘கோப்ரா’, ‘எனிமி’, ‘ரோமியோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்