தனுஷ், மிருணாள் திருமணம் எனப் பரவும் தகவல்

1 mins read
52134c80-676a-4b4e-9e08-79ca936d8af5
தனுஷ், மிருணாள் தாக்குர். - படம்: டெக்கான் ஹெரால்டு

சிம்பு, தனுஷ் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

இந்த முறை செய்தி பரபரப்பில் சிக்கிக் கொண்டிருப்பவர் தனுஷ்.

அவருக்கும் ‘சீதா ராமம்’ தெலுங்குப் படத்தில் நடித்த மிருணாள் தாக்குருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

எனினும் தனுஷ் தனது சிறந்த நண்பர் என்று மட்டும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் மிருணாள்.

இந்நிலையில், இருவருக்கும் மும்பையில் திருமணம் நடக்கப்போவதாகவும் அன்பர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் நடக்கப்போவதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது.

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து மணந்த தனுஷுக்கு அவர் மூலம் பதின்ம வயதில் இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இத்தம்பதியர் சட்டப்படி பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், திருமணம் குறித்த தகவல் தொடர்பாக தனுஷும் மிருணாளும் இதுவரை வாய்திறக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்