தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘முஃபாசா: த லயன் கிங்’ முன்னோட்டக் காட்சி வெளியானது

2 mins read
bc88d9a6-4c30-4e92-a9bd-567dbce46257
‘முஃபாசா: த லயன் கிங்’ படத்தில் குரல் கொடுத்தவர்கள். - படம்: ஊடகம்

‘முஃபாசா: த லயன் கிங்’ படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் இரு ‘லயன் கிங்’ படங்கள் வந்துள்ளன. 1994ஆம் ஆண்டில் ஒன்றும் 2019ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.

‘லயன் கிங்’ படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவைத் தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது ‘முஃபாசா: த லயன் கிங்’ படம்.

இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத, பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அரசக் குடும்பத்தைச் சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.

முஃபாசா படத்தின் ஆங்கில முன்னோட்டக் காட்சி சில நாள்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி முன்னோட்டக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர்கள் அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், ரோபோ சங்கர், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி ஆகியோரின் அட்டகாசமான குரலில் வெளியாகியுள்ள ‘முஃபாசா’ படத்தின் தமிழ் முன்னோட்டக் காட்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு மகேஷ் பாபுவும் இந்திப் பதிப்பில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு ஷாருக் கானும் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசிங்கம்