சிம்புவுடன் இணைய முருகதாஸ் திட்டம்

1 mins read
127b6b8f-afbd-4f5a-bd4f-d4b567303a48
சிலம்பரசன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். - படம்: ஊடகம்

அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் இயக்கினார்.

2020ஆம் ஆண்டு அவரது இயக்கத்திலும் ரஜினி நடிப்பிலும் வெளியான ‘தர்பார்’ படம் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தினை இயக்கினார். அப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது.

இதனால், தனக்குத் திருப்புமுனையாகத் தரும் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டார் முருகதாஸ்.

கடந்த செப்டம்பர் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பிலும் இவரது இயக்கத்திலும் வெளியான ‘மதராஸி’ பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், சிவாவுக்கு அடுத்தபடியாகச் சிம்புவுடன் இணைந்து பணியாற்ற முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.

சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது சிம்பு வெளிநாட்டில் இருப்பதால் இந்தியா திரும்பியதும் அவரைச் சந்தித்து முருகதாஸ் கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்