தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராம் சரண் படத்திற்கு இசையமைக்கிறார் இசைப்புயல்

1 mins read
ee13c5f3-de53-4fb6-ae6e-66eb53bbca6e
நடிகர் ராம் சரணுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். - படம்: ஊடகம்

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து திரைக்கு வந்த ‘கேம் சேஞ்சர்’ படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தை இயக்கிய புஜ்ஜி பாபு சனா இயக்கும் தனது 16வது படத்தில் நடிக்கிறார் ராம்சரண். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ‘தேவரா’ என்ற படத்தில் நடித்த ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. சிவராஜ்குமார், ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

கிராமத்துக் கதையில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘பெடி’ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்