சனிக்கிழமை ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழா

1 mins read
2944f6a9-0dcf-4c37-bad5-070b4b219f39
மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்சாமி. - படம்: ஊடகம்

‘மெய்யழகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தியின் 27வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘மெய்யழகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

மெய்யழகன் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31ஆம் தேதி கோயமுத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் நடிகர் சூர்யாவும் நிகழ்வில் கலந்துகொள்வதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசெய்திசூர்யா