திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரஹானா.
அண்மையில் இசைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இசைக்கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
“பாடகர்கள், இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கான வருமானம் எங்கே உள்ளது. எனவே இசைக்கலைஞர்கள் தங்கள் வருமானத்துக்கு திரையுலகை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது.
“உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலம் இசைக்கலைஞர்கள் புகழின் உச்சிக்குச் செல்கிறார்கள். ஆனால் இங்கேதான் திரையுலகைச் சார்ந்து மட்டுமே நாம் செயல்படுகிறோம்,” என்கிறார் ஏ.ஆர்.ரஹானா.

