திருச்சியில் தாம் படித்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.
அப்போது அந்தப் பள்ளியில் படிக்க தன் தந்தையுடன் சென்று நுழைவுத் தேர்வு எழுதியதை அவர் நினைவுகூர்ந்தார்.
“நான் எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டதில்லை. ஆனால் உனக்காக இன்று ஒருமணி நேரம் காத்திருந்து, உனக்கு இப்பள்ளியில் இடம் வாங்கி உள்ளேன். அதைக் கேட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது,” என்றார் சிவகார்த்திகேயன்.