தனது திருமண வாழ்க்கை குறித்த கனவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
தாம் நடித்த ‘கட்டாகுஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.
“அண்மையில் ஒரு படத்தில் நடித்தபோது தாய்மைக்குரிய உணர்வுகள் என் மனத்தில் அதிகரித்தன. அதன்பிறகு திருமண வாழ்க்கை குறித்த எனது பார்வையும் அணுகுமுறையும் வெகுவாக மாறிவிட்டன.
“என்னைத் திருமணம் செய்துகொள்பவர் எனக்கு நல்ல கணவராக இருந்தால் மட்டும் போதாது. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும் இருக்கவேண்டும். இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒருவரை நேரில் சந்திக்கும்போது எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுப்பேன்,” என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்தார்.
தமிழில் தனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் அமையவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், தரமான படங்களில் நடிக்கவேண்டும் என்பதால்தான், தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் தாம் ஏற்கவில்லை என்றார்.
ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தால் போதும் என்றும் நல்ல கதாபாத்திரங்களே தமது விருப்பம் என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.

