என்னைப் போன்ற குணங்களைக் கொண்டவர்தான் என் கணவராக வரவேண்டும்: ராஷ்மிகா

1 mins read
8b253071-b599-4828-9290-80a8be248251
ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக சில வதந்திகள் வெளியாகியுள்ளன. - படம்: சமூக ஊடகம்

இந்தியத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

‘அனிமல்’ மற்றும் ‘புஷ்பா 2’ படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. மேலும் இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் ராஷ்மிகா மாறியுள்ளார்.

ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக சில வதந்திகள் வெளியாகிவரும் நிலையில், தனக்கு கணவராக வருபவரின் தகுதிகள் குறித்து ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

ஒரு உறவில் அன்பு, அக்கறை, பாசம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருப்பது அவசியம். இது என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. என்னை போன்ற குணங்களைக் கொண்ட ஒருவர்தான் என் கணவராக வரவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று ராஷ்மிகா தெரிவித்தார்.

“எனது ஏற் தாழ்வுகள் அனைத்திலும் அவர் துணையாக நிற்க வேண்டும். நேர்மையாகவும், கவனத்துடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் பொறுப்புணர்வோடு இருந்தால் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கலாம்,” என்றார் ராஷ்மிகா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்