தன் தங்கை மீது உயிரையே வைத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை ராஷ்மிகா.
ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, ஷிமன் ஒரு மோதிரத்தை அன்புப் பரிசாக அளிக்க, எங்கு சென்றாலும் அதைக் கையோடு எடுத்துச் செல்ல ராஷ்மிகா தவறுவதில்லை.
மனத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும் சமயங்களில் மட்டும் தங்கை அளித்த மோதிரத்தை மறக்காமல் எடுத்து அணிவது ராஷ்மிகாவின் வழக்கமாகிவிட்டது.
ராஷ்மிகாவுக்கும் தங்கை ஷிமனுக்கும் இடையே 16 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. மூத்தவரின் வயது உங்களில் யாருக்காவது தெளிவாக, உறுதியாகத் தெரியும் என்றால், தங்கையின் வயதை நீங்களே கணித்துக்கொள்ளலாம்.
பார்க்க தன் அக்காவைப் போல் துறுதுறுவெனக் காட்சியளிக்கும் ஷிமன்தான் தனது மொத்த உலகம் என்று தயக்கமின்றிச் சொல்லும் ராஷ்மிகா, ஒரு தாயின் மனநிலையில்தான் தன் தங்கையை நேசித்து வருகிறார்.
“இந்த உலகத்தில் அவள்தான் எனக்கு எல்லாமுமாக இருப்பவள். என் தங்கையின் முகத்தை ஒருமுறை பார்க்காமல் எனக்கு அந்த நாள் தொடங்காது.
“சம்பாதிக்கும் சொத்துக்களை எல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள் என சிலர் அவ்வப்போது கேட்பதுண்டு. அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்தான்.
“என் தங்கைக்குப்போக, மீதமிருப்பதுதான் எனக்கு,” என்று ஒரு பேட்டியில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, இவரது கையில் புது மோதிரத்தைக் கண்ட ரசிகர்களும் செய்தியாளர்களும் ராஷ்மிகாவுக்குத் திருமணம் எனத் தாமாக முடிவுக்கு வந்துவிட்டனர்.
விஜய் தேவரகொண்டாதான் மோதிரம் வாங்கித் தந்துள்ளார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம்போல் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இந்தக் கிசுகிசு வேகமாகப் பரவியது.
இந்நிலையில், ராஷ்மிகா தன் தங்கை, மோதிரம் குறித்துப் பேசியதை அடுத்து, ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர்.